174
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
மோட்டார் சைக்கிள் குழுக்களை தேடி யாழ்ப்பாணத்தில் விசேட தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட உள்ளது. மூன்று காவல்துறைக் குழுக்கள் இந்த தேடுதல் வேட்டைக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர். சுன்னாகம், மன்னாய், கோப்பாய் போன்ற பகுதிகளில் இந்த மோட்டார் சைக்கிள் குழுக்கள் சஞ்சரிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் வடக்கு மாகாணத்தில் சகல காவல்துறை உயர் அதிகாரிகளின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஹர்த்தால் நடைபெற்ற அன்று கிளிநொச்சியில் பாதுகாப்பு சீர்குலைந்தமை குறித்தும் காவல்துறைத் திணைக்களம் உள்ளக விசாரணை ஒன்றை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love
1 comment
சுன்னாகம், மானிப்பாய், கோப்பாய் போன்ற பகுதிகளில் மோட்டார் சைக்கிள்(வாள்வெட்டுக்?) குழுக்களை தேடி மூன்று காவல்துறைக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாம்! சிரிப்பதா அன்றி அழுவதா, என்றே தெரியவில்லை? யாரைச் சொல்ல யாரை நோக? இவர்கள் இப்படியே தேடிக் கொண்டிருந்தால், இன்னும் ஒரு தசாப்தம் போனாலும், யாரையும் கைது செய்ய முடியாது!
நத்தை ஓட்டினுள் முடங்குவது போல், இராணுவ முகாம்களில் முடங்கிக் கிடக்கும் இக் குழுக்கள் தேவையேற்படும்போது மட்டும் சேவையில்(?) ஈடுபடுத்தப்படுகின்றன! ஏனைய சந்தர்ப்பங்களில் பூரண பாதுகாப்புடன் இவர்கள் (உண்பதும் உறங்குவதுமாக), இருக்குமிடம் பரகசியமான இரகசியமாகும்! சுன்னாகம், மானிப்பாய் மற்றும் கோப்பாய்ப் பகுதிகளில் இவர்களைத் தேடுவதென்பது, ‘ஆற்றில் போட்டதைக் குளத்தில் தேடுபவன்’, கதைக்கு ஒப்பானது!