முல்லைத்தீவில் தமது உதவிக்கு அழைத்து சென்றவர்கள் தாக்கப்படும் போது பொலிசார் வேடிக்கை பார்க்கின்றார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் பல்கலைகழக மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து மாணவர்களை படுகொலை செய்கின்றார்கள் என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் 64 ஆவது அமர்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
குறித்த அமர்வில் முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் குடாத்துறை , மற்றும் புளியமுனை , ஆகிய மீனவர்கள் மீது கடந்த மாதம் 17ம் திகதி பொலிசார் முன்னிலையில் பிற மாவட்ட மீனவர்கள் தாக்குதல் நடாத்தியமை தொடர்பில் பொலிசார் நீதியான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி ஆளும் கட்சி உறுப்பினர் து.ரவிகரன் பிரேரணை ஒன்றினை முன் மொழிந்தார்.
அதனை தொடர்ந்து சபையில் தெரிவிக்கையில்,
கொக்கிளாய் பகுதியில் பிற மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு உள்ளார்கள் எனவும் , அவர்களிடம் இருந்து சட்டவிரோத மீன் பிடி உபகரணங்களை பறிமுதல் செய்ய வேண்டும் எனக் கோரி, கடற்தொழில், நீரியல் வளத்துறையினர், மற்றும் பொலிசார், குடாத்துறை மற்றும் புளியமுனை ஆகிய பகுதிகளை மீனவர்களை தம்முடன் உதவிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் இருந்து சட்டவிரோத மீன் பிடி உபகரணங்களை பறிமுதல் செய்ய முற்பட்ட வேளை. சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்டு இருந்தவர்கள், பொலிசாரால் உதவிக்கு அழைத்து செல்லப்பட்ட குடாத்துறை மற்றும் புளியமுனை மீனவர்கள் மீது பொலிசார் முன்னிலையில் தாக்கப்பட்டனர்.
பொலிசார் தமக்கு உதவிக்கு அழைத்து சென்ற மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் போது. பொலிசார் தாக்குதலை தடுக்காது, தாக்குதலாளிகளை கைது செய்யாது வேடிக்கை பார்த்தனர்.
தாக்குதலுக்கு இலக்கான மீனவர்கள் தாக்குதலாளிகளிடம் இருந்து தப்பி சென்றனர்.
பின்னர் தாக்குதலுக்கு இலக்கான மீனவர்கள் தாக்குதலாளிகளை கைத