216
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் ஊடக நிறுவனங்கள் சீல் வைத்து மூடப்படவில்லை என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஊடக சுதந்திரம் பற்றி பிரச்சாரம் செய்த தற்போதைய நல்லாட்சி அரசாங்கம், ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் ஊடகங்களை கட்டுப்படுத்தியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love