குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீதத்தினை சீனாவிற்கு விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் கடன் சுமையை குறைக்கும் நோக்கில் இவ்வாறு துறைமுகத்தின் பெரும்பகுதி சீன நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவிற்கு சென்றிருந்தார். ஹம்பாந்தோட்டையில் சீன சுதந்திர வர்த்தக வலயமொன்றை அமைப்பதற்கும் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் வர்த்தக ரீதியான நன்மைகளை பெற்றுக்கொள்ளக்கூடியதல்ல எனவும் எனினும் சீனா போன்ற நாடுகளினால் இந்த துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய சாத்தியம் உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.