குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
சிரியாவில் பாடசாலை மீது தக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் 20 பாடசாலை மாணவ மாணவியர் கொல்லப்பட்டிருந்தனர்.
குண்டுத் தாக்குதல் வேண்டுமென்றே நடத்தப்பட்டிருந்தால் அது பாரிய யுத்தக் குற்றச் செயலாகும் என பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலை சிரிய அரச படையினரோ அல்லது தாமோ மேற்கொள்ளவில்லை என ரஸ்யா தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.