ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு செல்லவுள்ள ஜனாதிபதி பலாலி தெல்லிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியின் 454 ஏக்கர் நிலத்தை விடுவிக்கும் அறிவிப்பை ஜனாதிபதி வெளியிடுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இராணுவத்தினாரால் பொதுமக்களுக்காக கீரிமலைப் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட 100 வீடுகளை பயனாளிகளுக்கு கையளிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண கட்டளை தளபதி மகேஸ் சேனநாயக்கவின் தகவல் படி பலாலியின் பலாலி தெல்லிப்பளைக்கு மேற்கே அமைந்துள்ள காணியே விடுவிக்கப்படவுள்ளதாகவும் இதன்படி குறித்த பிரதேசத்தில் அமைந்திருந்த இராணுவத்தின் இரண்டு முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.