170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி
சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட ஒருதொகை பெறுமதிமிக்க மரக்குற்றிகள் கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த மரக்குற்றிகளை வன்னேரிக்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்று (சனிக்கிழமை) கொண்டு செல்லப்பட்ட வேளையிலேயே அவை பொலிஸாரினால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மரக்குற்றிகளை ஏற்றிசென்ற பார ஊர்தி பொலிசாரால் மீட்கப்பட்டமை குறிப்பிட தக்கதாகும். விசாரணைகளின் பின்னர் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.
Spread the love