குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
துருக்கியில் சுமார் 15 ஊடக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இராணுவ சதிப் புரட்சி முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகத் தெரிவித்து இவ்வாறு ஊடக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் இராணுவ சதிப் புரட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான அரச ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சதிப் புரட்சியில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஏற்கனவே ஒரு லட்சம் பேர் பதவி விலக்கப்பட்டுள்ளதுடன், 37,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சதிப் புரட்சியுடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.