ஹிலரி கிளிண்டனின் சிரேஸ்ட உதவியாளர் ஒருவரின் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை சோதனையிடுவதற்கான நீதிமன்ற உத்தரவை அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் பெற்றுள்ளனர். ஹிலரி கிளிண்டன் வெளியுறவுச் செயலராக இருந்த போது தனியார் மின்னஞ்சல் தகவல்களை பயன்படுத்தியது குறித்த விசாரணையை மீண்டும் தொடங்கவுள்ளதாக, மத்திய புலானாய்வுத் துறையின் தலைவர் ஜேம்ஸ் கோமி அறிவித்துள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் கோமியின் தலையீட்டால் ஹிலரி. வெற்றி வாய்ப்பில் சரிவை கண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக நடைபெற்ற கருத்துக் கணிப்பு முடிவு ஒன்றில் ஹிலரி, ட்ரம்பை காட்டிலும் ஒரு சதவீதமே முன்னணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது