170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டுமென பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் இவ்வாறு பிரதமர் பதவி விலக வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
பிரதமர் பதவி விலகத் தவறினால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நேரிடும் எனவும் பிணை முறி மோசடிகள் இடம்பெற்ற நிறுவனமான மத்திய வங்கி பிரதமரின் அமைச்சின் கீழ் இயங்கி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் எனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியை விலக வேண்டுமென தெரிவித்துள்ளார்.
Spread the love