216
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் அமைப்பின் குழு இலங்கை விவகாரம் குறித்து மீளாய்வு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 7ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 7ம் திகதி வரையில் இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் பற்றி மீளாய்வு செய்யப்பட உள்ள நிலையில் எதிர்வரும் 15ம் திகதி முதல் 16ம் திகதி வரையில் இலங்கை விவகாரம் குறித்து மீளாய்வு செய்யப்பட உள்ளது.
சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தில் கைச்சாத்திட்ட நாடுகள் தொடர்பில் இவ்வாறு ஆய்வு செய்யப்பட உள்ளது. பத்து சுயாதீன நிபுணர்களினால் நாடுகள் தொடர்பில் ஆய்வு செய்து அறிக்கையிடப்பட உள்ளது.
Spread the love