190
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
போதைப் பொருள் குற்றச் செயல்கள் தொடர்பிலான கைதுகளின் எண்ணிக்கை 23 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2014ம் ஆண்டை விடவும் 2015ம் ஆண்டில் அதிகளவான நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் மொத்த கைதுகளில் மேல் மாகாணத்திலேயே அதிகளவான கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது சம்பவங்களில் 60 வீதமானவை மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் ஒரு லட்சம் பேரில் 337 பேர் போதைப் பொருள் குற்றச் செயல்கள் தொடர்பில் கைது செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love