161
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஈராக் பிரதமர் Haider al-Abadi கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். மொசூலில் நிலைகொண்டுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் சரணடைய முடியும் எனவும் அவ்வாறு சரணடையவிட்டால் மரணிக்க நேரிடும் எனவும் அவர் அரச தொலைக்காட்சியில் விசேட உரையாற்றிய போது எச்சரிக்கை விடுத்துள்ளார். தீவிரவாதிகளுக்கு தப்பிக்க இடமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈராக்கிய படையினர் தொடர்ந்தும் மொசூல் நகர் நோக்கி முன்நகர்ந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love