மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் நிலை கொண்டிருந்த விசேட அதிரடிப்படையினர் அங்கிருந்து வெளியேறி காணி உரிய திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பயிற்சி நிலையம் அமைந்துள்ள பகுதியை உரிய திணைக்களத்திடம்; மீள ஒப்படைக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனிடம் பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைகளை அடுத்து அவை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதன் காரணமாக இன்றைய தினம் அங்கிருந்து விசேட அதிரடிப்படையினர் வெளியேறியுள்ளதோடு, குறித்த பயிற்சி நிலையம் அமைந்திருந்த பகுதி திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் இராணுவத்தினரின் முகாமாக இருந்த குறித்த பயிற்சிநிலையம் பின்னர் விசேட அதிரடிப்படையினரில் மாவட்ட தலைமை அலுவலகமாகவும் செயற்பட்டு வந்ததுடன் கடற்படையினரும் கடந்த 8 வருட காலமாக அங்கு பாரிய முகாமை அமைத்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.