250
கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவினருக்குமிருக்கிடையிலான சந்திப்பு ஒன்று நாளை இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் ஊடகங்களுக்கான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
நாளை முற்பகல் 9 மணியளவில் முதலமைச்சர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் இதன்போது முஸ்லிங்கள் தேசிய ரீதியில் எதிர்நோக்கும் பிரச்சினைகள்,கிழக்கில் சிறுபானமையினர் எதிர்நோக்கும் சவால்கள்,கிழக்கில் படையினரின் பிரசன்னம் ,மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்;துதல் ஆகியவை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Spread the love