1996 ஆம் ஆண்டு திருகோணமலை குமாரபுரத்தில் 24 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 முன்னாள் இராணுவத்தினர் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக சட்டமா அதிபரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த ஆறு முன்னாள் ராணுவத்தினரையும் விடுவித்தமை பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதி எனவும் இந்தத் தீர்ப்பானது சட்டத்துக்கு முரணானது எனவும் மனுவில் தெரிவிக்க்பபட்டுள்ளது. குறித்த மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் 22ம் திகதி பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
குற்றம் சுமத்தப்பட்ட ஆறு முன்னாள் இராணுவத்தினரையும் அனுராதபுரம் மேல் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் விடுவித்து தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.