இந்தியாவின் மத்திய பிரதேசத்தின் போபால் மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய சிமி தீவிரவாதிகள் 8 பேர் காவல்துறை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணையை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.கே.பாண்டே மேற்கொள்வார் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த 31-ம் திகதி போபால் மத்திய சிறையிலிருந்து சிமி தீவிரவாதிகள் 8 பேர் தப்பியதாகவும் அவர்கள் 8 பேரும் காவல்துறை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டமை குறித்து பல தரப்பிலிருந்தும் பலமான விமர்சனங்கள எழுந்துள்ள நிலையில் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுகான் சிங் இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.