மெக்ஸிகோவின் வட மாநிலத்தில் கன மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக அவசரகாலநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள எல்லை மாநிலமான தம்மோவ்லீபஸில் அமைந்திருக்கும் மூன்று நகரங்களில் அவசர காலநிலையை மெக்சிகோ அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பானது பாதிக்கப்பட்டுள்ள அல்டமீரா, சியுடாட் மடேரோ மற்றும் தம்பிகோ ஆகிய மூன்று நகரங்களுக்கு நிவாரண நிதி உதவி கிடைப்பதற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த வியாழக்கிழமை வருடத்துக்கு கிடைக்கின்ற சராசரி பருவமழை அளவில், ஐந்தில் ஒரு பகுதி மழை நான்கு மணிநேரத்தில் பெய்துள்ளதாகவும் வெள்ளப்பெருக்கால் வீடுகளை விட்டு வெளியேறியவர்களுக்காக ஆறு அவசரகால தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.