பாரீஸ் மாஸ்டேர்ஸ் டென்னிசின் கால்இறுதி ஆட்டத்தில் முதல்தர வீரரான செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்ததன் மூலம் தனது முதலாம் இடத்தை இழந்துள்ளார். பிரான்சில் இடம்பெற்று வருகின்ற பாரீஸ் மாஸ்டேர்ஸ் டென்னிஸின் கால்இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் குரோஷியாவை சேர்ந்த சிலிச் 6-4, 7-6 (7-2) என்ற நேர்செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஜோகோவிச்சுக்கு எதிரான ஆட்டத்தில் சிலிச் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு 14 முறையும் அவர் தோல்வி அடைந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2014-ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து உலகின் முதல்தர வீரராக ஜோகோவிச் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.