உருளைக் கிழங்கின் தோலைச் சீவிவிட்டே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். மண்ணுக்குள் விளையும் இந்தக் கிழங்கை நன்றாகக் கழுவிவிட்டுத் தோலுடன் பயன்படுத்துவதே நல்லது என சொல்லப்படுகின்றது. தோலுடன் சோ்த்து சமைக்கும் போது அதன் சத்து இரட்டிப்பாகின்றது . உருளைக் கிழங்கின் தோலில் அதிகளவில் பொட்டாசியம் காணப்படுவதனால் இது உயர் ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகின்றது.
இதில் உள்ள நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை கட்டுபபத்தி செரிமானத் திறனை அதிகரிக்கிறது. மேலும் இந்தத் தோலில் அதிகளவு விட்டமின் பி6 காணப்படவதனால் எமது உடலுக்கு நன்மை தரும் செரடோனின், டோபமைன் சுரப்புகளைத் தூண்டுகிறது. மேலும் உருளைக்கிழங்குத் தோலில் விட்டமின் சி, மக்னீசியம், துத்தநாகம் போன்ற சத்துகளும் குறிப்பிடத்தக்க அளவு உள்ளன.
உருளைக் கிழங்கின் தோலில் மிகக் குறைந்த அளவே கொழுப்பு, கொலஸ்ட்ரால், சோடியம் என்பன உள்ளதால் தோலுடன் சேர்த்து சமைக்கும்போது கிழங்கிலுள்ள கலோரிகளை அதிகரிக்காது. இதனால் உடல் எடையை அதிகாிக்காது பாா்த்துக் கொள்ளலாம். உருளைத் தோலில் விட்டமின் பி, சி மற்றும் கல்சியம் இருப்பதால் இவை மூன்றுமே நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
இதிலுள்ள ஃபைடோகெமிக்கல் புற்று நோயை தடுக்கிறது.அதேபோல் ஏற்கவே புற்று நோய் இருப்பவர்களுக்கு நோய் பரவாமல் இருக்கவும், அடுத்த நிலைக்கு செல்லாமல் இருக்கவும் உதவுகிறது.