அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் துப்பாக்கியுடன் ஒரு நபர் ஊடுருவியதால் ரகசிய போலீஸ் அதிகாரிகள் அவரை அவசரமாக மேடையை விட்டு வெளியேற்றி பாதுகாத்துள்ளனர்.
மேற்கு அமெரிக்காவில் உள்ள நெவேடா மாநிலத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் நேற்றிரவு உரையாற்றிகொண்டிருந்த போது மேடைக்கு எதிரே இருந்த ஒருநபரை உள்ளூர் போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். அந்த இனம் தெரியாத நபர் துப்பாக்கியுடன் பிரசார கூட்டத்துக்கு வந்து டிரம்பை கொல்ல முயன்றதாக போலீஸ் வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.
குறித்த நபர்கைது செய்யப்பட்ட பின்னர், மீண்டும் மேடையில் தோன்றிய டொனால்ட் டிரம்ப் பேச்சை தொடர்ந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.