குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஆழ் கடல் மீன்பிடியில் ஈடுபடுவதனை இலங்கை விரும்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கைத்தொழில் ரீதியில் பாரியளவிலான மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொண்டால் நீண்ட காலத்திற்கு மீன்பிடிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஆழ் கடல் மீன்பிடி நடவடிக்கைகள் துரிதமாக நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் மூன்று ஆண்டுகள் ஆழ் கடல் மீன்பிடி தொடர்ந்தால் மீன் வளம் முழுவதுமாக அழிந்து விடக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் இந்தியாவின் இந்த யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாரியளவிலான படகுகள் மூலம் ஆழ் கடல் மீன்பிடி நடவடிக்கைகள் கடல் வளத்தை பெரிதும் பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.