குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் புதிய அரசியல் கட்சியில் இணைந்து கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்து கொள்ளும் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் எந்தவொரு பதவியை வகித்தாலும் புதிய கட்சியொன்றில் அங்கத்துவம் பெற்றுக்கொண்டால் உடனடியாக அவரது உறுப்புரிமை ரத்துசெய்யப்படும் எனவும் இதன்படியே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியில் அங்கத்துவம் பெற்றுக்கொண்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் சுதந்திரக் கட்சி உறுப்புரிமை ரத்தானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.