குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் வேறும் கட்சியில் அங்கம் வகிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
புதிய கட்சியின் யாப்பில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய கட்சியில் அங்கம் வகிக்கும் பலர் வேறும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
நெருக்குதல்கள் மூலம் புதிய கட்சியின் பயணத்திற்கு தடை ஏற்படுத்த முடியாது – பசில் ராஜபக்ஸ
Nov 7, 2016 @ 07:02
நெருக்குதல்கள் மற்றும் அடக்குமுறைகளினால் புதிய அரசியல் கட்சியின் பயணத்திற்கு தடை ஏற்படுத்த முடியாது என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். புதிய கட்சியில் இணைந்து கொள்ளும் வேறும் கட்சியின் உறுப்பினர்களது அந்தக்கட்சி உறுப்புரிமையை ரத்து செய்தன் மூலமோ அல்லது வேறு அடக்குமுறைகளின் ஊடாகவோ ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பயணத்தை தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியில் இணைந்துகொள்ள விரும்பும் பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் என சுட்டிக்காட்டியுள்ள அவர் புதிய கட்சியில் அங்கத்துவர்கள் இணைத்துக்கொள்ளப்படும் போது அந்த கட்சியில் முதல் முதலாக இணைந்துகொள்வோரின் வரிசையில் தாமும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் கட்சியில் பத்து லட்சம் உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.