189
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தின் புதிய வகுப்பறை கட்டடத் திறப்பு விழா இன்று 07-11-2016 இடம்பெற்றது.கிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளா் க.முருகவேல் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு புதிய வகுப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்துள்ளாா்.
மிக நீண்டகாலமாக போதிய வகுப்பறைக் கட்டடம் இன்றி பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த கலைமகள் வித்தியாலயத்திற்கு மேற்படி வகுப்பறைக் கட்டடம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
பாடசாலை அதிபர் பெ.கணேசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி வலய ஆரம்ப பிாிவு உதவிக் கல்விப் பணிப்பாளா் கணேசலிங்கம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவா் யோகன், விளையாட்டுக்குழு தலைவா் சீலன் மற்றும் பெற்றோா்கள் என பலா் கலந்துகொண்டனா்.
Spread the love