188
நேற்றிரவு குருநாகல், நிக்கவரெட்டிய பிரதேச ஜும்மா பள்ளிவாசல் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 மணியளவில் 5 போத்தல்களில் பெட்ரோல் நிரப்பப்பட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இந்த விடையம் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர் றிஸ்வி ஜவஹர்ஷா உரிய தரப்பினரை தொடர்புகொண்டு விடயங்களை கையாண்டு வருகின்றார் எனவும் இது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டுவரப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட போத்தல்களை கைப்பற்றி மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love