பதன்கோட் தீவிரவாத தாக்குதல் தொடர்பான செய்திகளை ஒளிபரப்பியமை தொடர்பாக என்.டி.ரி.வி தொலைக்காட்சி அலைவரிசை மீதான ஒரு நாள் தடையை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் வெங்கையா நாயுடு இந்த திடீர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
என்.டி.ரி.வி இந்தி தொலைக்காட்சி அலைவரிசைக்கு எதிர்வரும் 9ம்திகதிக்கு ஒருநாள் தடை விதித்து இந்திய மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்திய மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்கள் உட்பட பல்வேறு தரப்பினராலும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வந்தது.
மேலும்என்.டி.ரி.வி நிறுவனமும் இந்தத் தடை முறையற்றது எனவும் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனவும் தெரிவித்து தடையை நீக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றில் இன்று வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் தடையை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.