குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஊனமுற்ற படைவீரர்கள் நடத்திய போராட்டம் மீது தாக்குதல் நடத்தப் பட்டமைக்கு முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், சுதந்திர பொதுஜன முன்னணியின் தவிசாளருமான ஜீ.எல்.பீரிஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார். ஊனமுற்ற படைவீரர்கள் நடத்திய போராட்டத்தின் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 30ம் திகதி முதல் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் படையினரை அழைத்து சிறிய சந்திப்பு ஒன்றைக் கூட ஜனாதிபதியினால் ஏன் முடியவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஊனமுற்ற படைவீரர்கள் மீது உலகில் எந்தவொரு அரசாங்கமும் இவ்வாறு தாக்குதல் நடத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.இலங்கை வரலாற்றில் போராட்டம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட மிகவும் மிலேச்சத்தனமான தாக்குதல் இதுவே என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.