குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதற்கு உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சின் அனுமதி தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறைமாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், தேர்தல் ஆணைக்குழு தலைவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது, தேர்தலை 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக நடத்த முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.