குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
வடக்கும் கிழக்கும் ஒரே விதமாக நடத்தப்பட வேண்டுமென மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தெற்கு மக்களுக்கு கிடைக்கும் என்ன விடயங்கள் வடக்கு மக்களுக்கு கிடைக்கவில்லை என்பது தமக்கு புரியவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் தமிழர்களுக்கு எதிராக ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டால் தமிழர் ஒருவர் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டிருப்பாரா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிளிநொச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் சிங்களவர் என்ற காரணத்தினால் அவரை இடமாற்றுமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் கோருவது நியாயமற்றது என சுட்டிக்காட்டியுள்ள அவர் நாட்டின் ஏனைய பகுதிகளில் தமிழர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருக்க சந்தர்ப்பம் காணப்படும் போது சிங்களவர் ஒருவர் பணிப்பாளராக ஏன் இருக்க முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.