232
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு நிரந்தர வருமானம் வர கூடியவாறு அவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்புக்களை வழங்க வேண்டும் என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் து.ரவிகரன் பிரேரணை ஒன்றினை முன்மொழிந்திருந்தார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்கிழமை நடைபெற்றது. அதன் போதே குறித்த பிரேரணையை ஆளும் கட்சி உறுப்பினர் முன் மொழிந்தார். பிரேரணையை முன் மொழிந்து கருத்து தெரிவிக்கையில்,
விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தோடு இணைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு நிரந்தர தொழில் இன்மையால், நிரந்தர வருமானம் இன்றி வறுமையில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு நிரந்தர வருவாயை ஈட்டி தரக்கூடியவாறு வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும் என ஜனாதிபதியை கோருவதாக தெரிவித்தார்.
Spread the love