குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி முறைப்பாடு செய்துள்ளது. லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் கூட்டு எதிர்க்கட்சியினர் இன்றைய தினம் நிதி அமைச்சருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர். நல்லாட்சி அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக 12 வௌ;வேறு குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாகவும், இந்த மோசடிகளின் மொத்தப் பெறுமதி 10 பில்லியன் ரூபா எனவும் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்களின் மூன்று குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மட்டும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகவும் கூட்டு எதிர்க்கட்சி முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.