162
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள இட்லிப் மாகாணத்தில் சிரிய-ரஷ்யா கூட்டுப் படைகள் நடத்திய வான்வெளி சோதனை தாக்குதலில் 7 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். இட்லிப் மாகாணத்தின் தெ ற்கில் உள்ள கான் ஷேகு நகரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என பிரித்தானியாவை மையமாக கொண்டு செயல்படும் சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. குறிப்பிட்ட அந்த பகுதியில் தங்களது விமானம் தாக்குதலை நடத்தவில்லை என ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Spread the love