குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
புதிய அரசியல் சாசனத்தில் வடக்கு கிழக்கு மக்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவப் படையினரின் எண்ணிக்கை எதிர்காலத்தில் குறைக்கப்பட வேண்டியது அவசியமானது என இலங்கைக்கு வந்துள்ள பிரித்தானிய அமைச்சர் ஜொயிஸ் அனேலுடனான சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதனால் பிரதேச மக்களின் சுதந்திரம் வரையறுக்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர் தற்போதைய அரசியல் சாசனத்தில் வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகளை உறுதி செய்ய போதியளவு ஏற்பாடுகள் கிடையாது எனவும் அவர் தெமரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மக்களுக்கு சம உரிமைகளை வழங்கக்கூடிய வகையில் இலங்கை மீது பிரித்தானியா அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.