குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ராம்ப் தெரிவானமை புதிய உலக மரபு ஒன்றை உருவாக்கும் என நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்காக ட்ராமப்பிற்கு வாழ்த்து கூறி வெளியிட்ட கருத்து தொடர்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ட்ராம்;ப்பின் தெரிவானது அனைத்து நாடுகளினதும் இறைமைக்கு முக்கியத்துவம் அளித்து நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யாத ஓர் உலக மரபினை உருவாக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க குடியரசுக் கட்சி அரசாங்கம் ஆதரவு வழங்கியதாகவும் அதற்கு நன்றி பராட்டுவதாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.