குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
தவறுக்கான பொறுப்பினை ஏற்றுக்கொண்டு பதவியை ராஜினாமா செய்யும் கலாச்சாரம் இலங்கையில் கிடையாது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். பிணை முறி மோசடிகள் தொடர்பில் பிரதமர் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சியின் சிலர் கோரி வருகின்ற போதிலும் அவ்வாறான கலாச்சாரம் இலங்கையில் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கோப் அறிக்கையில் பிரதமரின் பெயர் உள்ளடக்கப்படவில்லை என மற்றுமொரு தரப்பினர் கூறி வருவதாகவும் கோப் குழு அறிக்கையில் பிரதமரின் பெயர் உள்ளடக்கப்பட்டால் அது அரசியல் அறிக்கையாகவே கருதப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் குற்றம் சுமத்தப்பட்ட அனைவருமே விடுதலையாகியிருக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.