குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ட்ராம்ப் பொதுபல சேனாவின் நோக்கங்களை நிறைவேற்றுவாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ட்ராப்பின் தேர்தல் வெற்றிக்கு பொதுபல சேனா வாழ்த்து தெரிவித்துள்ளது. ட்ராம்ப்பின் வெற்றி இஸ்லாமிய தீவிரவாதத்தின் தோல்வியாகும் என பொதுபல சேனா குறிப்பிட்டுள்ளது.
இஸ்லாமிய தீவிரவாத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அமெரிக்கா போதியளவு ஆதரவினை வழங்கவில்லை எனவும் ட்ராம்பின் வெற்றி இந்த நடைமுறையில் மாற்றத்தை கொண்டு வரும் எனவும் பொதுபல சேனா தெரிவித்துள்ளது. ட்ராம்ப் அரேபிய நிதி சக்திகளினால் ஆட்சிப் பீடத்தில் அமர்த்தப்படவில்லை என பொதுபல சேனா தெரிவித்துள்ளது.