குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
நகர மக்களில் 20 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். கிராம புறங்களில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 8 வீதம் எனவும் நீரிழிவு நோய் பாரியளவு பிரச்சினையாக மாற்றமடைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீரிழிவு நோயினால் கண் நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் அதிகளவில் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர் சில வேளைகளில் பார்வை இழக்கக்கூடிய சாத்தியமும் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 14ம் திகதி உலக கண் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 40 வயதுக்கும் கூடியவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.