500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற இந்திய மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கு எதிர்வரும் நவம்பர் 15ம் திகதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கறுப்பு பணம் மற்றும் கள்ளப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக இந்தியா முழுவதும் புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன் கைவசமுள்ள இந்த ரூபாய் தாள்களை வங்கிகளில் வைப்புச் செய்து மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 500 ரூபாய், 1000 ரூபாய் தாள்கள் செல்லுபடியாகாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக சங்கம்லால் பாண்டே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், மத்திய அரசின் இந்த திட்டம் மக்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. அதனை செயல்படுத்த கூடுதல் கால அவகாசம் வேண்டும். எனவே, எனது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்என கோரிக்கை விடுத்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 15திகதி விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.