குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
முச்சக்கர வண்டிகளுக்கு பதிலாக இலத்திரனியல் கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அரசாங்கம் இது குறித்து கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் சுமார் 1.3 மில்லியன் முச்சக்கர வண்டிகள் காணப்படுவதாகவும் இவையினால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் அதிகளவில் காணப்படுவதாகவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டிகளுக்கு பதிலீடாக இலத்திரனியல் கார்களை பயன்படுத்த மக்கள் முனைப்பு காட்ட வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் சுமார் ஆயிரம் இலத்திரனியல் கார்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் உதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.