145
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டப் பற்றாக்குறையானது, கடந்த ஆண்டுக்கான பற்றாக்குறையுடன் ஒப்பிடும் போது 55 பில்லியன் ரூபாயினால் குறைந்துள்ளது. 2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் பிரகாரம், பற்றாக்குறை 670 பில்லியன் ரூபாயாக இருந்தது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தில் 5.4 சதவீதமாகும்.
எனினும், 2017ஆம் ஆண்டுகான பற்றாக்குறை 625 பில்லியன் ரூபாயாகும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.6 சதவீதமாகும். இதன்பிரகாரம் வரவு – செலவுத் திட்ட பற்றாக்குறை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது
Spread the love