171
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா சரபோவாவிற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் நல்லெண்ண தூதுவராக சரபோவா நியமிக்கப்பட்டுள்ளார். ஊக்கமருந்து பயன்படுத்தியதாக சரபோவா ஒப்புக்கொண்டிருந்த நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சரபோவாவின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love