158
உத்தரபிரதேச மாநிலம், ஷகிபாபாத் மாவட்டத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து காரணமாக தொழிற்சாலைக்குள் சிக்கிய 13 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர் எனவும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
மின்சார கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love