203
இந்தியாவின் ஆந்திர மாநிலத் தேர்தலில் போட்டியிடப்போவதாக ஆந்திராவின் பிரபல நடிகர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் அனந்தபூரில் உள்ள அரசு ஜூனியர் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவு திரட்டியதாகவும் இவ்விரு கட்சிகளும் மத்தியிலும் மாநிலத்திலும் வெற்றி பெற்ற என்று கூறிய அவர் ஆனால் ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து தரப்படும் என்ற வாக்குறுதியை அரசுகள் காப்பாற்றவில்லை என்றும் குற்றம் சுமத்தினார்.
இனியும் இந்தக் கட்சிகளை நம்பி பயனில்லை என்றும் வரும் 2019-ல் நடைபெறும் ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தோல்வியோ, வெற்றியோ நீங்களே முடிவு செய்யுங்கள். ஆனால் நான் எப்போதும் மக்களுக்காக போராடுவேன் என்றும் அங்கு பேசிய நடிகர் பவன் கல்யாண் குறிப்பிட்டார்.
Spread the love