173
வடக்கு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளின் முயற்சியை முறியடிக்கும்போது தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.இந்திய இராணுவ அதிகாரி ஒருவரின் தகவலின் பிரகாரம் இதனை தி இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது. பாரமுல்லா மாவட்டம், ராம்பூர் செக்டார் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்றபோது மோதல் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
எவ்வாறெனினும் அவர்களின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக கூறிய இராணுவ அதிகாரி அப் போது இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.இதேவேளை அப் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்வதாக குறிப்பிட்ட அவர் கூடுதல் தகவலுக்காக காத்துள்ளதாகவும் மேலும் கூறினார்.
Spread the love