முற்றுகையிடப்பட்ட, அலெப்போ நகரத்தில் இரசாயன ஆயுதங்களை சிரிய தீவிரவாதிகள் பயன்படுத்தியதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளதாக ரஸ்ய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென் மேற்கு அலெப்போவில் வெடிக்காத வெடிமருந்துகளை நிபுணர்கள் ஆய்வு செய்ததில், அவற்றில் குளோரின் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, கிளர்ச்சியாளர்கள் அரசாங்கத்தின் பிடியில் உள்ள நகரத்தின் பகுதிகளில் வாயு குண்டுகளை வீசியதாக சிரிய அரச ஊடகம் குற்றம் சாட்டியிருந்தது. சிரியா அரசாங்கம் 2015ல் கிராமங்களில் நடத்திய மூன்று தாக்குதல்களில் குளோரின் வாயுவை பயன்படுத்தியாக சர்வதேச இரசாயன ஆயுத புலன் விசாரணை அதிகாரிகள் தெரிவித்த போது அந்த முடிவுகளைக் ரஸ்யா மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.