குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர சவால் விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஒரு காலையும் மற்றும் ஒரு காலை இன்னுமொரு கட்சியிலும் வைக்காது, முடிந்தால் புதிதாக உருவாக்கப்பட்ட கட்சியில் உறுப்பினராகி பதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு மஹிந்த அமரவீர, கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுக்கு சவால் விடுத்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினர் , புதிய அரசியல் கட்சி அமைப்பதாக புதிய கட்சியினர் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்த போதிலும், அவ்வாறு எதனையும் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பொய்யாக பிரச்சாரம் செய்த போதிலும் எவரும் புதிய அரசியல் கட்சியில் அங்கம் வகிக்கவில்லை என தெரிவித்துள்ள அவர் எவரையும் சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்குவதற்கான அவசியம் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினராக அங்கம் வகித்தால் கட்சியின் அபிவிருத்தியை இலக்கு வைத்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.