குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் புதிய கட்சியில் இணைந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக கொழும்பு வார இறுதி ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. மிகவும் முக்கியமான தருணமொன்றில் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டணி கட்சியில் இணைந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் புதிய கட்சியின் நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே இந்த அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றம் அதிருப்தியடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின உறுப்பினர்கள் இவ்வாறு ஆளும் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சியில் இணைந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புதிய கட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போதைக்கு அங்கத்துவம் வழங்கப்படாது எனவும், எதிர்வரும் தேர்தல்களில் கட்சி சட்ட ரீதியாக போட்டியிடத் தேவையான பின்னணி உருவாக்கப்பட்டு வருவதாகவும் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.