குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
அவுஸ்திரேலிய அணி அழுத்தங்களுக்கு உள்ளாகி வருவதாக அணியின் பயிற்றுவிப்பாளர் டெரன் லீமன் ஒப்புக்கொண்டுள்ளார். தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 85 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.
ஹோபார்ட்டில் நடைபெற்று வரும்இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டியிலும் அவுஸ்திரேலியா தோல்வியைத் தழுவியிருந்தது. துடுப்பாட்டத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு அணியை அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது என ஒப்புக்கொண்டுள்ள லீமன் எனினும் மிகச் சிறந்த வீரர்களே அணியில் இடம்பிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.