குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
உறவினரின் அந்தியேட்டி கிரியை செய்ய சென்ற நபர் ஒருவர் கீரிமலை கேணியில் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளார். அச்சுவேலி தெற்கை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான வடிவேலு சுபாஸ்கரன் (வயது 38) எனும் நபரே உயிரிழந்தவராவார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
அச்சுவேலியை சேர்ந்த குறித்த நபர் ஞாயிற்றுக்கிழமை உறவினர் ஒருவரின் அந்தியேட்டி கிரியை செய்ய கீரிமலை சென்றுள்ளார். கிரியைகளை முடித்துக்கொண்டு கிரீமலை கேணியில் நீராட சென்ற போது நீரில் மூழ்கி உள்ளார். நீரில் மூழ்குவதனை அவதானித்த அங்கிருந்த ஏனையவர்கள் அவரை மீட்டு தெல்லிப்பளை வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போதிலும் , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்து உள்ளனர்.